தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்பவர் நடிகர் யோகி பாபு. இவரது பெயர் இல்லாமல் திரைப்படங்கள் வெளியாவதே இல்லை என்றும் கூறலாம். சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர், தனது அயராத உழைப்பினால் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத பிரபலமாக மாறியுள்ளார். தொடர்ச்சியான படங்கள் கமிட்டாகி பிஸியாக இருக்கும் திரைப்பிரபலங்களில் இவரும் ஒருவர். 

இந்நிலையில் யோகிபாபு கிரிக்கெட் விளையாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார் நிகழ்ச்சி தொகுப்பாளர் Makapa ஆனந்த். பந்துகளை சிக்ஸர், ஃபோர் என விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் யோகிபாபு. பிகில் படத்தில் யோகிபாபுவின் கால்பந்து திறமையை கண்டு ரசித்த ரசிகர்களுக்கு இந்த வீடியோ சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. 

யோகிபாபு பள்ளி, கல்லூரி காலத்தில் கிரிக்கெட் மற்றும் ஃபுட்பால் போன்ற விளையாட்டுகளில் சிறந்த விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பா. ரஞ்சித் தயாரிக்கும் பொம்மை நாயகி படத்தில் இணைந்தார் யோகிபாபு. 

யோகிபாபு நடிப்பில் ட்ரிப் திரைப்பட ட்ரைலர் நேற்று வெளியானது. டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கும் இந்த படத்தில் சுனைனா, கருணாகரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். த்ரில்லர் கலந்த நகைச்சுவை படமாக இந்த படம் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உதயஷங்கர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். அடர்ந்த காட்டில் மாட்டுக்கொள்ளும் மனிதர்கள் எப்படி தப்பித்து வருகிறார்கள், சோம்பிகளிடம் எப்படி போராடுகிறார்கள் என்பதே இதன் கதை. 

சக்தி சிதம்பரம் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள திரைப்படம் பேய் மாமா. இந்த படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தகவல் இன்னும் தெரியவில்லை. இது தவிர்த்து ஜெகஜாலக்கில்லாடி, பிஸ்தா, சைத்தான் கா பச்சா, சதுரங்க வேட்டை2, பன்னிக்குட்டி, மண்டேலா, வெள்ளை யானை, கடைசி விவசாயி, கர்ணன் ஆகிய திரைப்படங்கள் யோகிபாபு கைவசம் உள்ளது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by MA KA PA Anand (@makapa_anand)