தமிழ் திரையுலகின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகவும், முக்கிய நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் M.சசிகுமார் அவர்கள் நடிப்பில் இந்த ஆண்டு (2022) கடைசியாக வெளிவந்த திரைப்படம் கொம்பு வச்ச சிங்கம்டா. இதனைத் தொடர்ந்து M.சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளிவர தயாராகி வருகின்றன.

முன்னதாக இயக்குனர் ஹேமந்த் இயக்கத்தில் M.சசிகுமார் நடித்த “காரி” திரைப்படம் நிறைவடைந்துள்ள நிலையில் விரைவில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இயக்குனர் அனிஸ் இயக்கத்தில் “பகைவனுக்கு அருள்வாய்”, மற்றும் இயக்குனர் N.V.நிர்மல் குமார் இயக்கத்தில் “நா நா” ஆகிய படங்கள் M.சசிகுமார் நடிப்பில் அடுத்தடுத்து வெளிவர தயாராகி வருகின்றன. 

இதனிடையே  இயக்குனர் சத்யசிவா இயக்கத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் M.சசிகுமார் நடித்துள்ள திரைப்படம் காமன் மேன் (COMMON MAN). செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இத்திரைப்படத்தில், M.சசிகுமார் உடன் இணைந்து ஹரிப்ரியா கதாநாயகியாக நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் விக்ராந்த் நடிக்கிறார். 

ராஜா பட்டசர்ஜி ஒளிப்பதிவில், ஸ்ரீகாந்த்.NB படத்தொகுப்பு செய்துள்ள காமன் மேன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது M.சசிகுமாரின் காமன் மேன் திரைப்படத்தின் டைட்டில் நான் மிருகமாய் மாற என மாற்றப்பட்டுள்ளது. மேலும் நான் மிருகமாய் மாற திரைப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#CommonMan is now #NaanMirugaMaaiMaara
October release https://t.co/rj4ECsWnGy@Sathyasivadir @GhibranOfficial @HariPrriya6 @vikranth_offl @ChendurFilm @RIAZtheboss @RajaBhatta123 pic.twitter.com/axZ50PDkW3

— M.Sasikumar (@SasikumarDir) September 17, 2022