திரையுலகில் நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருபவர் தனுஷ். இந்த வாரம் தொடர்ந்து தனுஷ் படத்தின் அப்டேட்டுகள் வருவதால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள். ஏற்கனவே கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வரஜ இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். 

மேலும் இந்தியில் அத்ரங்கி ரே, ராம் குமார் இயக்கத்தில் ஒரு படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படம் என்று நடிக்கிறார். இவை தவிர கிரே மேன் என்கிற ஹாலிவுட் படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கும் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2விலும் நடிக்கிறார். 

இதற்கு நடுவில் சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்போதைக்கு D43 என்று அழைக்கப்படும் இப்படத்தில் நாயகியாக நடிக்க மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுத பிரபல பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

இவர் முதல்முதலாக வசனம் மற்றும் திரைக்கதை எழுதும் படம் இதுவே. ஹே சண்டக்காரா, ஏய் சுழலி, ஆளப்போறான் தமிழன், ஒரு விரல் புரட்சி, சிம்டாங்காரன், மரண மாஸ், சிங்கப்பெண்ணே உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை எழுதியவர் விவேக் என்பது குறிப்பிடத்தக்கது. D43 படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாவதை பார்க்க முடிகிறது. 

படத்தில் மூன்று பாடல்கள் முடிவடைந்து விட்டதாக சமீபத்தில் ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ளார். நான்காம் பாடல் கம்போஸ் செய்து வருவதாக கூறியிருந்தார். பாடல்கள் நன்றாக உருவாகி வருவதாகவும், சாலிட்டான ஆல்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.