தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியர் ஆக விளங்குபவர் கபிலன்.50க்கும் மேற்ப்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றி உள்ளார்.இவரது மகள் தூரிகை கபிலன் , இவரும் தந்தையை போலவே சினிமா துறையில் எழுத்தாளர்,ஸ்டைலிஸ்ட் மற்றும் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார்.

பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார் தூரிகை.எம் பி ஏ படித்து முடித்துள்ள இவர் Being Women என்ற இதழையும் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அசோக் செல்வன்,ஜீ வி பிரகாஷ் உள்ளிட்டோருக்கு இவர் ஸ்டைலிஸ்ட் ஆக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கபிலரின் மகள் தூரிகை நேற்று அரும்பாக்கத்தில் உள்ள கபிலனின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.28 வயதான தூரிகை இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ள பலரும் தற்கொலைக்கு என்ன காரணம் என தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

பல பிரபலங்களும் தங்கள் ஆழ்ந்த இரங்கல்களை கபிலன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்து வருகின்றனர்.கலாட்டா சார்பாக கபிலன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறோம்.