தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக தொடர்ந்து முக்கியமான திரைப்ப்படங்களை தயாரித்து வருகிறது லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம். அந்த வகையில் இந்த ஆண்டில்(2022) தமிழில் சிவகர்த்திகேயனின் டான் யோகி பாபுவின் பன்னிக்குட்டி ஆகிய படங்களை தயாரித்த லைகா ப்ரொடக்ஷன்ஸ், ஹிந்தியில் கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக்காக தயாரான குட் லக் ஜெர்ரி மற்றும் அக்ஷய் குமாரின் ராம் சேது ஆகிய படங்களை இணைந்து தயாரித்தது.

குறிப்பாக ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த அமரர் கல்கியின் அற்புத படைப்பான பொன்னியின் செல்வனை நிஜமாக்கிய இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்தது. 2 பாகங்களாக தயாராகி இருக்கும் பொன்னியின் செல்வனின் முதல் பாகம் சமீபத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ள நிலையில், 2-வது பாகம் அடுத்த ஆண்டு(2023) ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வைகைப்புயல் வடிவேலு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் நாய் சேகர் ரிட்டன்ஸ், ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம், பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கதாநாயகனாக நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வரிசையில் லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பாக தயாராகி இருக்கிறது பட்டத்து அரசன். களவாணி & வாகை சூடவா படங்களை இயக்கிய இயக்குனர் A.சற்குணம் இயக்கத்தில் அதர்வா மற்றும் ராஜ்கிரன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் பட்டத்து அரசன் திரைப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்க, ராதிகா சரத்குமார் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

லோகநாதன்.S ஒளிப்பதிவில், ராஜா முஹம்மது படத்தொகுப்பு செய்துள்ள பட்டத்து அரசன் திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். விரைவில் இத்திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டத்து அரசன் திரைப்படத்தின் அதிரடியான டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது. அந்த ஃபர்ஸ்ட் லுக் இதோ…
 

We are extremely happy to unveil ✨ the Title & First Look of #PattathuArasan 👑

Starring @Atharvaamurali #Rajkiran @AshikaRanganath @realradikaa
Directed by @SarkunamDir 🎬
Music by @GhibranOfficial 🎶
DOP #Loganathan 🎥
Editor @editor_raja ✂️@gkmtamilkumaran #Subaskaran pic.twitter.com/afLQ6osQ7C

— Lyca Productions (@LycaProductions) November 10, 2022