கடந்த 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார். 

Lokesh Kanagaraj Wishes Karthi On His Birthday

இந்நிலையில் நடிகர் கார்த்தியின் பிறந்தநாளான இன்று ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ளார் லோகேஷ், அதில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி சார், உங்கள் அர்ப்பணிப்பும் கடின உழைப்பும் எப்போதுமே உத்வேகமாக இருந்தது, உங்களுடன் கைதியில் பணியாற்றியது என் அதிர்ஷ்டம் என கருதுகிறேன் என்று பதிவு செய்துள்ளார். லோகேஷின் இந்த பதிவிற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் கைதி 2 திரைப்படம் எப்போது என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

Lokesh Kanagaraj Wishes Karthi On His Birthday

இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்த லோகேஷ் கனகராஜ், சமீபத்தில் மாஸ்டர் படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் துவங்கியதாக பதிவு செய்திருந்தார்.