தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.இதில் மாஸ்டர்,விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு தளபதி 67 படத்தினை அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மாஸ்டர் படத்தின் மிக பெரிய வெற்றியை அடுத்து இருவரும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.அடுத்த பட ஸ்கிரிப்ட் வேலைகளுக்காக சமூகவலைத்தளங்களில் இருந்து பிரேக் எடுப்பதாக லோகேஷ் சில தினங்களுக்கு முன் தெரிவித்தார்.

அடுத்த படம் விஜயுடன் தான் என்பதை உறுதிசெய்வது போல சில பல நிகழ்வுகளில் லோகேஷ் ஹிண்ட் கொடுத்துள்ளார்.நேற்று ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற லோகேஷ் , பேச துவங்கியதும் தளபதி 67 அப்டேட் விரைவில் வரும் தயாரிப்பு நிறுவனம் வெகு விரைவில் அறிவிப்பார்கள் என்று பேச ஆரம்பித்தார்

இதன் மூலம் மீண்டும் ஒரு முறை விஜயின் அடுத்த படத்தினை இயக்குவதை உறுதிசெய்துள்ளார்.சமூகவலைத்தளங்களில் இருந்து விலகி இருப்பது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட்டை சிறப்பாக எழுதுவதற்காக தான் என்றும் தெளிவுபடுத்தினார்.தளபதி 67 அறிவிப்பு எப்போது வரும் என்ற ஆவலில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.