ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் படம் பற்றி பேசிய லோகேஷ் !
By Sakthi Priyan | Galatta | August 14, 2020 20:08 PM IST

கடந்த 2017-ம் ஆண்டு மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார்.
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடித்துள்ள படம் மாஸ்டர். லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பே படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதிக எதிர்பார்ப்பில் உள்ள இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர். மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. சமீபத்தில் பாடல்களின் கரோக்கி வெர்ஷனும் வெளியானது.
ஏப்ரல் 9-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக மாஸ்டர் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்குள் கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் அதிகம் பரவிய காரணத்தினால் தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. அதனால் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தயாரிப்பாளர் தள்ளி வைத்துள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக தியேட்டர்கள் மூடப்பட்டு தான் இருக்கின்றன. மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது பற்றிய விவரமும் தெளிவாக இல்லை.
மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளரும் நடிகர் விஜயின் மாமாவுமான சேவியர் பிரிட்டோ, சமீபத்தில் படத்தின் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார். மாஸ்டர் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், என்ன நடந்தாலும் அப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகும் என்பதை தெரிவித்திருந்தார். கொரோனா லாக்டவுன் பிரச்சனையை பொறுத்தே படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும், அது பொங்கலுக்கா அல்லது தீபாவளிக்கா என்று தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வதற்காகதான் படக்குழு காத்திருக்கிறது என்று தெளிவாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாலிவுட் ஹங்கம்மாவுடன் நேரலையில் பேசிய இயக்குனர் லோகேஷிடம் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் காம்போ ப்ராஜெக்ட் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ், இப்போதைக்கு இதுகுறித்து நான் பேச முடியாது. இன்னும் பேச்சு வார்த்தையில் தான் உள்ளது. தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து வெளியானால் உண்டு. நான் என்னுடைய அடுத்த ஸ்கிரிப்ட் எழுதும் பணியில் உள்ளேன் என்று கூறியுள்ளார்.
ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்தின் அப்டேட் ஏதாவது கிடைக்காதா என்ற ஏக்கத்தில் உள்ளனர் திரை விரும்பிகள்.
Breaking statement on Sivakarthikeyan's Doctor | Anirudh | Nelson
14/08/2020 07:20 PM
Hiphop Tamizha's next big album released - watch video here!
14/08/2020 06:40 PM
Arun Vijay's Sinam stunning 2nd look poster
14/08/2020 06:08 PM