மாநகரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் இயக்குனராக பெரிய வரவேற்பை பெற்றவர் லோகேஷ் கனகராஜ்.இதனை அடுத்து இவர் கார்த்தி நடித்த கைதி படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடிக்க வளர்ந்து வரும் முக்கிய இயக்குனர்கள் லிஸ்டில் இணைந்தார் லோகேஷ்.

தனது மூன்றாவது படத்தில் தளபதி விஜயை இயக்கும் வாய்ப்பை பெற்றார் லோகேஷ் கனகராஜ்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.இந்த படம் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது.முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.

ஹாட்ட்ரிக் வெற்றியுடன் உலகநாயகனின் விக்ரம் படத்தினை அடுத்து இயக்கினார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி,பஹத் பாசில் உள்ளிட்டோர் நடிக்க படம் மிகப்பெரிய வசூலை செய்தது.இந்த படத்தினை அடுத்து இவர் மீண்டும் விஜயுடன் அடுத்த படத்தில் இணையவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.

மாஸ்டர் கூட்டணி தான் தளபதி 67 படத்தில் இணைகிறது என கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது,இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை ஆரம்பித்துவிட்டதாக லோகேஷ் தெரிவித்தார்,தற்போது சமூகவலைத்தளங்களில் இருந்து ஒரு சிறிய பிரேக் எடுப்பதாக லோகேஷ் தெரிவித்துள்ளார்.

தனது அடுத்த பட அறிவிப்புடன் சந்திக்கிறேன் என்று ரசிகர்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ள லோகேஷ்.இரண்டு கைகள்  மோதுவது போல ஒரு ஸ்மைலி ஒன்றை இணைத்துள்ளார.இது மாஸ்டர் படத்தில் வரும் முக்கிய ஷாட்டை குறிப்பது போலவும் அடுத்த படம் விஜயுடன் தான் என்பது போல ஹிண்ட் செய்வதுபோலவும் உள்ளது.இதானால் நிச்சயம் தளபதி 67 படத்தின் அறிவிப்பாக தான் இருக்கும் என்று விஜய் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.