எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார்கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்ற தகவலை இயக்குனர் லோகேஷ் இசை வெளியீட்டு விழாவில் உறுதி செய்தார்,சஸ்பென்ஸ் ஆக வைக்கவேண்டும் என நினைத்தோம் லீக் ஆனதால் தெரிவிக்கிறேன் என்று கூறினார்.இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது.

தற்போது சூர்யா இயக்குனர் லோகேஷ் மற்றும் அவரது இயக்குனர் குழுவுடன் ஒரு புகைப்படத்தை , லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.ஏற்கனவே கமல்,விஜய்சேதுபதி,பஹத் என பெரும் நடிகர்கள் இருக்கையில் சூர்யாவும் இந்த படத்தில் இணைந்துள்ளது படத்தின் எதிர்பார்ப்பை உச்சம் தொடவைத்துள்ளது.