2017-ம் ஆண்டில் வெளியான மாநகரம் படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்தி வைத்து கைதி திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். இதனைத்தொடர்ந்து தற்போது தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருக்கிறார். 

Lokesh Kanagaraj Shares New Picture From Master For Vijay Birthday

தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இணைந்து நடிக்கும் மாஸ்டர் படத்தை XB ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ், தீனா, சேத்தன், கௌரி கிஷன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. கொரோனா ஊரடங்கால் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப்போடும் நிலை உருவானது. 

Lokesh Kanagaraj Shares New Picture From Master For Vijay Birthday

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்பெஷலான பதிவு ஒன்றை செய்துள்ளார். தளபதி விஜய்யின் பிறந்தநாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, மாஸ்டர் படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றியும் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், மாஸ்டர் திரைப்படம் மறக்க முடியாத அனுபவம், ஒரு நாளை குறிப்பிட்டு கூற முடியவில்லை.. எல்லா நாட்களும் சிறப்பாக இருந்தது. உங்களுடன் கழித்த ஒவ்வொரு கணமும் நேசத்துக்குரியது விஜய் அண்ணா என்று பதிவு செய்துள்ளார்.