பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழும் தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் இன்று ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகியிருக்கிறது. விஜய் ரசிகர்கள் இன்னும் மிகுந்த ஆவலோடு வாரிசு திரைப்படத்தின் ரிஐஈசை கொண்டாடுவதற்கான மற்றொரு காரணம் தளபதி 67.

முன்னதாக வாரிசு திரைப்படத்திற்கு பிறகு தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரித்துள்ள வாரிசு திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக ரிலீஸாகி இருக்கும் வாரிசு திரைப்படம் கட்டாயமாக இந்த பொங்கல் விழாவில் அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக இருக்கும் என விமர்சனங்கள் வெளி வருகின்றன. முன்னதாக ரசிகர்களோடு முதல் நாள் முதல் காட்சியை சென்னையில் உள்ள ரோகிணி திரையரங்கில் கண்டு ரசித்த வாரிசு படக்குழுவினர் நெகிழ்ச்சியில் கண் கலங்கினர்.

இந்நிலையில் தளபதி விஜயின் தளபதி 67 படத்தை இயக்கவிருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் வாரிசு திரைப்படத்தை ரசிகர்களோடு கண்டு ரசித்துள்ளார். இதனை அடுத்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, “ரொம்ப நாட்கள் கழித்து அவரை (தளபதி விஜய்) இப்படி பார்ப்பது மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கிறது. குடும்பங்களுக்காக செய்தது. எனக்கு மிகவும் பிடித்தது.” என்றார். பழைய தளபதி விஜயை பார்த்தது போல் இருந்ததா? என கேட்டபோது, “ஆம் அப்படித்தான் இருந்தது” என்றார். வாரிசு படம் பார்க்க வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஆரவாரோடு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்த வீடியோவும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த வீடியோவும் வெளியாகி இருக்கின்றன. அந்த வீடியோக்கள் இதோ…