தளபதி67 அறிவிப்போடு Social Media-ல் ரீ-என்ட்ரி கொடுத்த லோகேஷ் கனகராஜ்! ட்ரெண்டாகும் மாஸான புகைப்படம் இதோ

தளபதி67 அறிவிப்போடு லோகேஷ் கனகராஜ் சோசியல் மீடியாவில் ரீ-என்ட்ரி,lokesh kanagaraj re entry in social media with thalapathy67 surprise photo | Galatta

இந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனராக உயர்ந்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகன் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை நிரூபிக்கும் வகையில் தனது விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். விக்ரம் திரைப்படமும் மெகா பிளாக்பஸ்டர் ஹிட்டாகி ஆல் டைம் ரெக்கார்டாக சாதனைகளும் படைத்தது.

இதனை அடுத்து மாஸ்டர் படத்திற்கு பிறகு மீண்டும் தளபதி விஜய் அவர்களுடன் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள தளபதி 67 திரைப்படத்தின் மீது சமீப காலமாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வரும் நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ இன்று ஜனவரி 30 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தளபதி 67 படத்தின் முதல் அறிக்கையை வெளியிட்டது.

அதன்படி செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ உடன் திரு.ஜெகதீஷ் பழனிசாமி அவர்களும் இணைந்து தயாரிக்கும் தளபதி 67 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, கலை இயக்குனராக N.சதீஷ்குமார் பணியாற்றுகிறார். மேலும் தினேஷ் மாஸ்டரின் நடன இயக்கத்தில், அன்பறிவு மாஸ்டர்களின் ஸ்டன்ட் இயக்கத்தில், பக்கா ஆக்சன் பிளாக் படமாக தயாராகும் தளபதி 67 படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக தளபதி விஜய் உடன் இணைந்து திரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் தளபதி 67 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளிவரும் நிலையில், இது குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் இருந்து சிறிது காலம் விலகி இருக்க விரும்புவதாக தெரிவித்து விட்டு சென்ற இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தனது தளபதி 67 படத்தின் முதல் அறிவிப்போடு மீண்டும் சமூக வலைதளங்களில் கொடுத்துள்ளார். அந்த வகையில், தனது ட்விட்டர் பக்கத்தில், “இனிய மாலை வணக்கம் மக்களே மீண்டும் ஒருமுறை தளபதி 67 திரைப்படத்தில் விஜய் அண்ணா அவர்களுடன் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது" எனக் குறிப்பிட்டு மாஸ்டர் படத்தின் ஸ்டைலில் தளபதி விஜயுடன் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார் சமூக வலைதளங்களில் இரண்டாகி வரும் அந்த புகைப்படம் இதோ…
 

Good evening guys! More than happy to join hands with @actorvijay na once again ❤️ 🔥#Thalapathy67 🤜🏻🤛🏻 pic.twitter.com/4op68OjcPi

— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) January 30, 2023

SSராஜமௌலியின் RRR வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம் - அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

SSராஜமௌலியின் RRR வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளரின் அடுத்த பிரம்மாண்ட படம் - அதிரடி அறிவிப்பு இதோ!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... புதிய படத்தின் அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் பாலிவுட்டில் ஜோதிகா... புதிய படத்தின் அசத்தலான ஷூட்டிங் அப்டேட் இதோ!

தளபதி67 பூஜைக்கே போனேன்.. ஆனா LCU-ல.?-மாநகரம் & மைக்கேல் படங்களின் ஹீரோ சந்தீப் கிஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!
சினிமா

தளபதி67 பூஜைக்கே போனேன்.. ஆனா LCU-ல.?-மாநகரம் & மைக்கேல் படங்களின் ஹீரோ சந்தீப் கிஷன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!