கதைத்தேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் தமிழ் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.தற்போது மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கைதி படத்தில் நடித்துள்ளார்.Dream Warrior Pictures சார்பில் S.R.பிரபு இந்த படத்தை தயாரிக்கிறார்.

Lokesh Kanagaraj PressMeet Before Kaithi Release

சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.அஞ்சாதே நரேன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி நாளை வெளியாகவுள்ளது.இதனை முன்னிட்டு இந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

Lokesh Kanagaraj PressMeet Before Kaithi Release

தற்போது விஜய் நடித்துவரும் தளபதி 64 படத்தினை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களின் சுவாரசியமான கேள்விகள் பலவற்றிற்கு லோகேஷ் பதிலளித்தார்.அப்போது செய்தியாளர் ஒருவர் விஜய் கைதி படம் பார்த்தாரா என்ன சொன்னார் என்று கேட்டார்.அதற்கு பதிலளித்த லோகேஷ் விஜய் இன்னும் படம்பார்க்கவில்லை,கைதி படத்தின் தயாரிப்பாளர்களே இன்று தான் இந்த படத்தினை பார்க்கவுள்ளனர் என்ற தகவலை தெரிவித்தார்.