தளபதி 67 ஸ்கிரிப்ட் வேலைகள் ஆரம்பம்...லோகேஷ் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட் !
By Aravind Selvam | Galatta | July 30, 2022 16:28 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் தளபதி விஜய்.இவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியாகி கலவையான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் வம்சி இயக்கத்தில் தயாராகி வரும் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கவுள்ள அடுத்த படங்களை இயக்கவுள்ளதாக தற்போதே சில பெயர்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.இதில் மாஸ்டர்,விக்ரம் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜிற்கு தளபதி 67 படத்தினை அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மாஸ்டர் படத்தின் மிக பெரிய வெற்றியை அடுத்து இருவரும் மீண்டும் இணைவது கிட்டத்தட்ட உறுதி ஆகி விட்டது.இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.விக்ரம் படத்தின் வெற்றி,மாஸ்டருக்கு பிறகு மீண்டும் லோகேஷ் விஜயுடன் இணைவது போன்றவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.
ரசிகர்களும் அந்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த லோகேஷ் அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் வேளைகளில் இருப்பதாகவும் அந்த படத்தின் அறிவிப்பினை வெகு விரைவில் தயாரிப்பாளர்கள் வெளியிடுவார்கள் அதுவரை கொஞ்சம் பொறுமை காத்துக்கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார்.இந்த படத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.