லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனரின் புதிய படம் அறிவிப்பு.. – விஜய் ரசிகர்களால் வைரலாகும் பதிவு..

லோகேஷ் கனகராஜ் இணை இயக்குனர் வெங்கியின் புதிய படம் -  Lokesh kanagaraj associate Venky new movie announcement viral | Galatta

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் சதீஷ், காமெடியனாக மட்டுமல்லாமல் தற்போது கதாநாயகனாக நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு சதீஷ் கதாநாயகனாக நடித்து 'நாய் சேகர்' மற்றும் 'ஓ மை கோஸ்ட்' திரைப்படங்கள் வெளிவந்தன. நாய் சேகர் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின் அவர் தற்போது 'சட்டம் என் கையில்' திரைப்படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். சமீபத்தில் விஜயின் வாரிசு திரைப்படத்தில் சிறிய ரோலில் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சதீஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை நேற்று சென்னையில்  நடைபெற்றது. ஒயிட் கார்ப்பட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் வெங்கி இயக்கவுள்ள இப்படத்திற்கு தற்காலிகமாக . 'புரொட்க்ஷன் No.3’ என்று பெயரிடப்பட்டுள்ளது. பூஜையில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் R.ரவீந்திரன், தயாரிப்பாளர் லலித், மற்றும் தயாரிப்பாளர் மதன் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

stunt master supreme sundar and his team explain the ajith thunivu fight sequencesபிளாக் காமெடி திரைப்படமாக தயாராகும் இப்படத்தில் சதீஷ் உடன் இணைந்து சிம்ரன் குப்தா கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் ஆனந்தராஜ், ஜான் விஜய், ரமேஷ் திலக், தங்கதுரை, மதுசூதனன் உள்ளிட்ட பலர் இப்படத்தில்  நடிக்கவுள்ளனர்.ஒளிப்பதிவாளர் யுவா ஒளிப்பதிவு மேற்கொள்ள இசையமைப்பாளர்  VBR இசையமைக்கிறார்.

சதீஷ் நடிக்கவுள்ள இப்படத்தின் இயக்குனரான வெங்கி பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜின்  'மாஸ்டர்',  'விக்ரம்' ஆகிய படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர். மேலும் தீவிர விஜய் ரசிகரான இயக்குனர் வெங்கி வாரிசு படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று தளபதி விஜயிடம் படத்திற்காக வாங்கிய முன்பணம் செக்கை கொடுத்து வாழ்த்துகளுடன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வு குறித்த புகைப்படத்துடன் இயக்குனர் வெங்கியின் பதிவு  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Starting My First Directorial Movie with the Blessings From My #Thalapathy #VijayAnnan😍😍 Produced by @WCF2021 @vijaywcf .Starring @actorsathish #SimranGupta Dop @iamyuvakarthick Co produced by @Muralikris1001 editor @editorsiddharth art @Gdurairaj10 🤗♥️ pic.twitter.com/Z6lOgKcO9A

— Venki (@Venki_dir) January 19, 2023

மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜுடன் இணை இயக்குனராக பணியாற்றிய வெங்கியின் முதல் படமான  'புரொட்க்ஷன் No.3’ அறிவிப்பையடுத்து இணையத்தில் விஜய் ரசிகர்கள் அவரை வாழ்த்தி வருகின்றனர்.

“இந்த பதிவு துணிவு படத்துடன் ஒப்பீடு அல்ல..” – வாரிசு பாடலாசிரியர் விவேக்கின் பதிவு வைரல்..
சினிமா

“இந்த பதிவு துணிவு படத்துடன் ஒப்பீடு அல்ல..” – வாரிசு பாடலாசிரியர் விவேக்கின் பதிவு வைரல்..

“துணிவு திரைப்படம் எனக்கு ஒரு சவால்..” -  படம் குறித்து மஞ்சு வாரியர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“துணிவு திரைப்படம் எனக்கு ஒரு சவால்..” - படம் குறித்து மஞ்சு வாரியர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

ஓடிடியில் ஹன்சிகாவின் திருமணம்.. ரசிகர்களுக்கு Cute Surprise.. வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

ஓடிடியில் ஹன்சிகாவின் திருமணம்.. ரசிகர்களுக்கு Cute Surprise.. வைரலாகும் வீடியோ இதோ..