லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. படத்தின் விநியோக உரிமையை செவென் ஸ்க்ரீன் ஸ்டுடியோ கைப்பற்றியுள்ளதாக அறிவிப்பு வெளியானது. ஏப்ரல் மாதம் வெளியாகும் இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. 

master

அனிருத் இசையில் உருவான படத்தின் முதல் சிங்கிளான ஒரு குட்டி கதை பாடல் வெளியாகி ட்ரெண்டானது. அருண் ராஜா எழுதிய இப்பாடலை விஜய் பாடியிருந்தார். இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். 

master

நேற்று கல்லூரி விழா ஒன்றில் பேசிய படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இன்னும் இரண்டு நாட்கள் கொண்ட படப்பிடிப்பு இருப்பதாக தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல், விஜய் அண்ணா சேது அண்ணா ஒன்றாக திரையில் வரும் காட்சிகள் ஃபைரா இருக்கும் என்று கூறி அரங்கத்தை அதிர வைத்தார். ரசிகர்களுக்கு இனிப்பூட்டும் செய்தியாக அமைந்தது இந்த அப்டேட்.