சினிமா ஒரு கலை,என்டர்டைன்மெண்ட் என்பதை தாண்டி நமக்கு பல விஷயங்களை கற்றுத்தரும் ஆசானாக திகழ்கிறது.நமக்கு முன் வாழ்ந்த சாதனை மனிதர்களையும்,சமகாலத்தில் இருக்கும் பல வீரர்களையும் நமக்கு காண்பித்துள்ளது.

சமூக பிரச்சனைகளை சினிமாவின் வாயிலாக சொல்வதால் பலகோடி மக்களிடம் இது சேர்கிறது.சினிமாவால் நம் நாட்டில் பல மாற்றங்கள் நடந்திருக்கின்றன.இப்படி சினிமாவின் தாக்கம் வலிமையாகவே இருந்துள்ளன.பல மறக்கமுடியாத இனிமையான தருணங்களையும் இந்த சினிமா நினைவுபடுத்தும்,பல கசப்பான சம்பவங்களையும் இந்த சினிமா நினைவு படுத்தும்.சில நேரங்களில் சினிமாவில் சொல்லப்படும் காட்சிகள் உண்மையாக நடப்பதும் உண்டு.

2019 இறுதி முதல் தற்போது வரை உலகினை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பல நாடுகளையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்த கொரோனா வைரஸ் தொடங்கியது சீனாவில் தான்.2011-ல் வெளியான சூர்யாவின் 7ஆம் அறிவு படத்தின் கதை இதுதான்.சீனாவில் இருந்து வரும் ஒரு நோயால் மக்கள் அவதிப்படுவார்கள் அவர்களை காப்பாற்றும் முயற்சியில் ஹீரோ ஈடுபடுவார்.இதனை தவிர 2011-ல் வெளியான Contagion என்ற படமும் கிட்டத்தட்ட கொரோனாவின் தாக்கத்தை அப்போதே மக்களிடம் எடுத்துரைத்திருக்கும்.

சில தினங்களுக்கு முன் விசாகப்பட்டினத்தில் ஒரு கெமிக்கல் ஃபேக்டரியில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக ஒரு ஊரை சேர்ந்த ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.இது 2019-ல் சூர்யா தயாரிப்பில் விஜயகுமார் நடித்து இயக்கிய உறியடி 2 படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது.

2020 அனைவருக்கும் கடினமான ஆண்டாகவே அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.இருக்கின்ற கொரோனா உள்ளிட்ட பிரச்சனைகள் முடிவதற்கு முன்னேயே,புதிதாக ஒரு பிரச்சனை தொடங்கியுள்ளது.Locust எனப்படும் பயிரை சாப்பிடும் வெட்டுக்கிளிகள் வடஇந்தியாவிற்குள் நுழைந்து பல விவசாய நிலங்களை நாசமாகியுள்ளது.இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வருகின்றன.இது கடந்த வருடம் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தின் கதை ஆகும்.இந்த வெட்டுக்கிளிகளால் பயிர்கள் நாசமாகி பஞ்சம் ஏற்படும் சூழல் உருவாகலாம் என்றும் கருதப்படுகிறது.இது குறித்து இந்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.சினிமா காட்சிகள் உண்மையில் நடந்தாலும், இதுபோன்ற கஷ்டமான சூழ்நிலைகளில் மக்கள் பாத்துகாப்பாக இறங்கவேண்டும் என்றும் விரைவில் நாம் இந்த கஷ்டமான சூழ்நிலையை கடந்துவிடுவோம் என்றும் நம்புவோம்.