இயக்குனர் கேவி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் 2011ம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் “கோ” இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்  என்பதை அழுத்தமாக தெரிவிக்கும் விதத்தில் இத்திரைப்படம் உருவானது. அந்தக் கருத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வர்த்தக ரீதியில் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

RS இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவான இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்க நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக அறிமுகமானார். நடிகர் அஜ்மல், பியா பஜ்பை ,பிரகாஷ்ராஜ், கோட்டா சீனிவாசராவ் என பலர் நடித்த இந்த திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. 

இந்த திரைப்படத்தில் ஜீவா நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் சிலம்பரசன் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடிகர் ஜீவாவின் நடிப்பில் இத்திரைப்படம் தயாராகி வெளிவந்து பாக்ஸ் ஆபீஸில் 50 கோடி ரூபாய் வசூலித்தது. சமீபத்தில் இயக்குனர் கே வி ஆனந்த் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.அவருக்கு இரங்கல்  தெரிவித்த சிலம்பரசன் “கோ” திரைப்படத்தில் நடிக்க இருந்த விஷயத்தைப் பற்றி தெரிவித்திருந்தார். 

leaked photos of actor simbu in ko movie goes viral

இந்நிலையில் சமூக வலைதளங்களில் கோ திரைப்படத்தில் முதலில் சிலம்பரசன் நடித்த புகைப்படங்கள் கசிந்து வைரலாகி வருகிறது. பலரும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் உண்மைதான் என பேச சிலர் இது உண்மையான புகைப்படங்கள் அல்ல எடிட் செய்தவை எனவும் பதிவிட்டு வருகிறார்கள். இந்தப் புகைப்படங்கள் உண்மையா பொய்யா என்ற கேள்விகளுக்கு இடம் கொடுக்காமல் சமூக வலைதளங்களில் பலரும் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்கள்