டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஒரு நாயகனாக தன்னை உருவாக்கிக்கொண்டு பின்னர் முனி,காஞ்சனா படங்களின் மூலம் தன்னை ஒரு இயக்குனராகவும் நிரூபித்தவர் ராகவா லாரன்ஸ்.இவர் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Lawrence Trust Children Recover From Corona

ஹிந்தியில் அக்ஷய் குமார் நடித்து வரும் காஞ்சனா படத்தின் ரீமேக்கை இயக்கிவருகிறார்.இதனை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2,மற்றும் பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் சார்பாக எஸ்.கதிரேசன் தயாரிக்கும் படத்திலும் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

Lawrence Trust Children Recover From Corona

சமூக அக்கறை அதிகம் உள்ள நடிகர்களில் ஒருவர் லாரன்ஸ் தன்னால் முடிந்தளவு பலருக்கும் பல உதவிகளை அவர் அவ்வப்போது செய்துவருகிறார்.அவர் நடத்திவரும் டிரஸ்ட்டில் இருக்கும் 18 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யபட்டது.

Lawrence Trust Children Recover From Corona

தற்போது இந்த 18 குழந்தைகளும் குணமடைந்து திரும்பிவிட்டனர் என்று ராகவா லாரன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.தனது சமூகசேவை குழந்தைகளை கைப்பற்றியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.குழந்தைகள் குணமடைந்த்து வீடு திரும்ப உதவிய அரசு அதிகாரிகளுக்கும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.