பல கோடி தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்த நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்த வலிமை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்று ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. முன்னதாக இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை படத்தில் வழக்கறிஞராக நடித்த அஜித் குமார் வலிமை படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தார்.

பக்கா ஆக்ஷன் ப்ளாக் திரைப்படமாக வெளிவந்த வலிமை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜித்குமார்-H.வினோத்-நீரவ்ஷா-போனிகபூர் வெற்றிக் கூட்டணியில் 3வது திரைப்படமாக தயாராகி வரும் AK61 திரைப்படத்தில் அஜித் குமாருடன் இணைந்து மலையாள நடிகை மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். AK61 திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

AK61 திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் முதல் முறையாக AK62 திரைப்படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடிக்க உள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா தயாரிக்கவுள்ள AK62 திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இதனிடையே தொடர்ந்து பைக் ரைடிங்கில் ஈடுபட்டு வரும் அஜித் குமார், அதன் ஒரு பகுதியாக தற்போது கார்கில் போரில் வீரமரணமடைந்த இந்திய போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கார்கில் போர் நினைவிடத்திற்கு சென்றுள்ளார். கார்கில் நினைவிடத்தில் போர் வீரர்களுக்கு அஜித் குமார் மரியாதை செய்யும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ…
 

நடிகர் அஜித்குமார் கார்கில் போர் நினைவிடத்தை பார்வையிட்டார்!!#Ajithkumar𓃵 #AK62 #AK pic.twitter.com/WMJEnmiqJP

— Don Cine Updates (@DonCineUpdates) September 7, 2022