சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் & உலக நாயகன் கமல்ஹாசன் எனும் திரையுலகில் மிகப் பெரிய ஆளுமைகளுக்கு சமமாக தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் கொடுத்த பொக்கிஷம் விவேக். அவரது மறைவை இன்று வரை ஏற்றுக்கொள்ள தமிழ் ரசிகர்களின் மனம் மறுக்கிறது.

தனது நகைச்சுவைகளும் பஞ்ச் வசனங்களும் சிரிப்பதற்காக மட்டுமல்ல சிந்திப்பதற்கும் என்று பகுத்தறிவையும் சமூக அக்கறையும் எப்போதும் பேசும் சின்ன கலைவாணர் விவேக் தமிழ் திரையுலகின் பேரிழப்பு. இந்நிலையில் மறைந்த நடிகர் விவேக் மறைவுக்கு முன்னர் கடைசியாக கலந்துகொண்ட நகைச்சுவை நிகழ்ச்சியின் புதிய ட்ரெய்லர் வெளியானது.

அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாக உள்ள லொல் எங்க சிரி பார்ப்போம் எனும் நகைச்சுவை நிகழ்ச்சியை நடுவராக தொகுத்து வழங்குகிறார் நடிகர் விவேக். அவருடன் இணைந்து நடிகர் சிவா தொகுத்து வழங்க போட்டியாளர்களாக நடிகர் சதீஷ், விஜய் டிவி புகழ், பவர்ஸ்டார் சீனிவாசன், stand-up காமடியன் அபிஷேக், நடிகர் பிரேம்ஜி, நடிகை ஆர்த்தி உள்ளிட்ட 10 பேர் போட்டியாளர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் போட்டியாளருக்கு 25 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது. லொல் எங்க சிரி பார்ப்போம் நிகழ்ச்சி வருகிற ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் வீடியோ.வில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் இதன் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கலக்கலான லொல் எங்க சிரி பார்ப்போம் ட்ரெய்லர் இதோ...