பரியேறும் பெருமாள் எனும் அற்புதமான படைப்பை தந்து சிறந்த இயக்குனராய் மக்கள் மனதில் விளங்குபவர் மாரி செல்வராஜ். தற்போது நடிகர் தனுஷ் வைத்து படம் இயக்கி வருகிறார். தனுஷ் 41 ஆன இந்த படத்தின் டைட்டில் கர்ணன் என பேசப்பட்டு வருகிறது. கலைப்புலி S தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார். 

karnan santhoshnarayanan

படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மலையாள நடிகர் லால் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருநெல்வேலியில் துவங்கப்பட்டது. நடிகர் யோகிபாபு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்ற தகவலும் கலாட்டா செவிகளுக்கு எட்டியது. இவர்களை தொடர்ந்து நடிகை லக்ஷ்மி பிரியா இணைந்துள்ளார். ரிச்சி படத்தில் இவரது நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது. 

lakshmipriya lakshmipriya

தனுஷ் நடித்த பட்டாஸ் திரைப்படம் இன்று வெளியானது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வரும் D40 படம் ரிலீஸ் பட்டியலில் உள்ளது. இரண்டாம் படத்திலே இவ்வளவு எதிர்பார்ப்பை உண்டாக்கிய இயக்குனர் மாரி செல்வராஜின் திரை வளர்ச்சியை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.