தமிழ் திரை உலகில் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா தற்போது தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன் உடன் தனி விமானம் மூலம் கொச்சின் சென்றுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை நயன்தாரா நடித்த “நெற்றிக்கண்” திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. சீரியல் கில்லர்-த்ரில்லர் திரைப்படமாக வெளிவர உள்ள நெற்றிக்கண் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா பார்வையற்ற பெண்ணாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த வருடம் நடிகை நயன்தாராவின் பிறந்தநாள் அன்று வெளியான டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் முதல் பாடலாக “இதுவும் கடந்து போகும் பாடல்” வெளியானது. இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ள திரைப்படத்தை இயக்குனர் மில்லின்ட் ராவ் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் R.D.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள நெற்றிக்கண் திரைப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிவரும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க நடிகை நயன்தாராவும் நடிகை சமந்தாவும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார் தயாரித்துள்ளார். 
இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் தனி விமானம் மூலம் கொச்சின் சென்றுள்ளனர். இருவரும் விமானத்தில் இருந்து இறங்கும் விமான நிலைய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இருவரும் தங்களது சொந்த விஷயமாகவும் கொச்சினில் சில நாட்கள் கழிப்பதற்காகவும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.