தென்னிந்திய திரை உலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் நெற்றிக்கண். ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் கில்லர்-த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த நெற்றிக்கண் படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடிகை சமந்தாவுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் பிரித்திவிராஜ் கதாநாயகனாக நடிக்கும் கோல்டு, மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான லூசிபர் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்காக மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்து வரும் காட்பாதர், இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் பாலிவுட் படத்திலும் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார் .

இந்நிலையில் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பதற்காக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இன்று திருப்பதி சென்றுள்ளனர். தரிசனம் முடித்து திரும்பி வரும் வேளையில் ரசிகர்களையும் செய்தியாளர்களையும் சந்தித்தனர். திருப்பதி கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தரிசனம் முடித்து திரும்பும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. ட்ரெண்டாகும் அந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.