லாபம் படத்தின் யாழா யாழா பாடல் வெளியீடு !
By | Galatta | February 17, 2021 18:00 PM IST

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியானது. லாபம் படத்தின் படப்பிடிப்பின் தளத்தில் தினசரி மக்கள் கூட்டம் அலைமோதுகிறது என ஒரு பேச்சு போய்க்கொண்டே இருக்கிறது. கொரோனாவை பொருட்படுத்தாமல் மக்கள் விஜய் சேதுபதியை காண கும்பலாக திரண்டு வருவதை காண முடிந்தது.
லாபம் இறுதி கட்ட படப்பிடிப்பில் விஜய் சேதுபதியுடன் டேனியல் ஆனி பாப், கலையரசன் ஆகியோர் இணைந்து நடித்தனர். விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளை இரண்டு மாதங்கள் முன்பு நிறைவு செய்தது படக்குழு. திரையரங்க ரிலீஸுக்கு பிறகு லாபம் படத்தின் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. தேதிகள் குறித்த விவரம் தெரியவில்லை. முதலில் திரையரங்கில் வெளியாகி அதன் பின் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் படத்தின் யாழா யாழா பாடல் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. ஸ்ருதிஹாசன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். இதன் மேக்கிங் ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.