மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் லாபம் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஜோடியாக ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். ஜகபதி பாபு, சாய் தன்ஷிகா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

சமூக அக்கறை மிகுந்த கதையை பேசும் ஜனநாதனின் திரைமொழிக்கு தனி ரசிகர்கள் உண்டு. புறம்போக்கு படத்தில் விஜய் சேதுபதியை இயக்கிய ஜனநாதன், இரண்டாவது முறையாக லாபம் படத்தில் இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியானது. கொரோனாவை பொருட்படுத்தாமல் மக்கள் விஜய் சேதுபதி வைத்து படப்பிடிப்பை கடந்த வருட இறுதியில் நடத்தி முடித்தனர். 

லாபம் படத்தின் போஸ்ட் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாம் சிங்கிள் யாமிலி யாமிலியா பாடல் வெளியாகியுள்ளது. திவ்யா குமார் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். 

விஜய் சேதுபதி கைவசம் துக்ளக் தர்பார் படம் உள்ளது. அதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உள்ளது. தற்போது மும்பையில் மும்பைக்கர் படப்பிடிப்பில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இன்று காலை வெற்றிமாறனின் விடுதலை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. 

தெலுங்கில் உப்பெனா உள்ளிட்ட படங்கள் வசூல் சாதனை செய்ததோடு அதிக பாராட்டுகளையும் குவித்தன. இவரது நடிப்புக்கு மேலும் மகுடன் சூட்டும் விதமாக சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை மத்திய அரசு அறிவித்து இவரை மேலும் கௌரவப்படுத்தி உள்ளது. 

பொன்ராம் இயக்கி வரும் VJS 46, பாலிவுட்டில் மும்பைகர் போன்ற படங்களும் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது.