பிரபல மாடலாக இருந்து பின்னர் ஓகே கண்மணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் சில கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியவர் அஷ்வின்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டைவால் குருவி,நினைக்க தெரிந்த மனமே உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.

இதனை தொடர்ந்து தற்போது விஜய் டிவியை கலக்கி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றிருந்தார்.இந்த தொடரின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவராக மாறினார் அஷ்வின்.இந்த தொடரின் மூலம் கனவுகண்ணனாக விரைவில் உருவெடுத்தார் அஷ்வின்.

இவர் குக் வித் கோமாளி சீசன் 2 போட்டியில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தினார்.இவரது குட்டி பட்டாஸ்,கிரிமினல் க்ரஷ்,Loner உள்ளிட்ட ஆல்பம் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து trident ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்ன சொல்ல போகிறாய் படத்தில் அஷ்வின் ஹீரோவாக ஹீரோவாக நடித்து வருகிறார்,இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது.

இவர் நடித்திருந்த குட்டி பட்டாஸ் பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.சந்தோஷ் தயாநிதி இசையில்,பிக்பாஸ் புகழ் சாண்டி மாஸ்டர் நடன அசைவுகள் அமைக்க வெங்கி இந்த பாடலை இயக்கியுள்ளார்.ரேபா மோனிகா இந்த பாடலில் அஷ்வினுடன் இணைந்து நடித்துள்ளார்..தற்போது இந்த பாடல் வீடியோ யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அசத்தல் சாதனையை நிகழ்த்தியுள்ளது,

A post shared by The Route (@therouteofficial)