தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் விஜய் தேவர்கொண்டா.அர்ஜுன் ரெட்டி என்ற படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகராக மாறினார்,குறிப்பாக பெண்களின் மனம் கவர்ந்த கனவு கண்ணனாக மாறினார் விஜய் தேவர்கொண்டா.பெண்கள் மட்டுமின்றி பல இளைஞர்களின் மனதிலும் மாஸ் ஹீரோவாக உருவெடுத்தார் விஜய் தேவர்கொண்டா.

இவர் நடித்துள்ள லிகர் திரைப்படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து JGM என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இவற்றை அடுத்து இவர் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் குஷி என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.Shiva Nirvana இந்த படத்தினை இயக்கி வருகிறார்.Hesham Abdul Wahab இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.காஷ்மீரில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் சில புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளனர்.அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.