திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Kushboo

இந்நிலையில் நகரம் படத்தில் இடம்பெற்ற காமெடி காட்சியை கொண்டு மீம் உருவானது. இதில் சுந்தர்.சி வடிவேலுவை பார்க்கும்போது, Sundar See என்றும், வடிவேலுவை பார்க்காத போது, Sundar didn't See என்றும் 
அமைக்கப்பட்டுள்ளது. 

sundarcmeme

சிரிக்கும் ஸ்மைலியுடன் இந்த மீமை பகிர்ந்தார் நடிகை குஷ்பு. தற்போது உள்ள ட்ரெண்டில் நல்லது கெட்டது என அனைத்திற்கும் மீம்ஸ் வெளியாகிறது. இதனை திரை பிரபலங்களும் இயல்பாக ரசித்து வருகின்றனர்.