தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் இயக்குனராக திகழ்ந்தவர் கே.எஸ்.ரவிக்குமார்.தமிழில் கடைசியாக இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தை இயக்கியிருந்தார்.இந்த படம் சரியாக போகாத காரணத்தால் தெலுங்கு மற்றும் கன்னடா படங்களை இயக்கிவந்தார்.

KS Ravikumar Denies Rumors Ajith Sun Pictures Film

ரெக்க,கோமாளி,நான் சிரித்தால் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துவந்தார்.தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களான ரஜினி,கமல்,அஜித்,விஜய் நால்வரையும் இயக்கிய ஒரே இயக்குனர் இவர் தான்.அஜித்துடன் இவர் இணைந்த வில்லன்,வரலாறு படங்கள் சூப்பர்ஹிட் அடித்தன.

KS Ravikumar Denies Rumors Ajith Sun Pictures Film

இதனை தொடர்ந்து இவர்கள் எப்போது இணைவார்கள் என்று ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர்.இந்நிலையில் கே.எஸ்.ரவிக்குமார் அஜித்தை இயக்குகிறார் என்றும் அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர் என்றும் ட்விட்டரில் ரவிக்குமாரின் போலி கணக்கில் இருந்து ஒரு நபர் பதிவிட்டிருந்தார்.

KS Ravikumar Denies Rumors Ajith Sun Pictures Film

இந்த செய்தி ரசிகர்களிடம் தீயாக பரவியது.தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இதற்கு விளக்கமளித்துள்ளார்.தனக்கு ட்விட்டரில் அக்கவுண்ட் கிடையாது என்பதை ரசிகர்களுக்கு தெளிவுபடுத்திய அவர்.இந்த செய்தி வெறும் வதந்தி தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.

KS Ravikumar Denies Rumors Ajith Sun Pictures Film