சீரியல்களில் நடித்து பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலங்களாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளனர்,அப்படி பிரபலமானவர்களில் ஒருவர் க்ரித்திகா அண்ணாமலை.சன் டிவியின் பெரிய ஹிட் தொடரான மெட்டி ஒலி தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் க்ரித்திகா அண்ணாமலை.

அடுத்தாக செல்லாமே தொடரில் வில்லியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக மாறினார் க்ரித்திகா.அடுத்தாக மரகத வீணை,கல்யாண பரிசு,பாசமலர்,வம்சம் என பல ஹிட் தொடர்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் க்ரித்திகா.

இவற்றை தவிர ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு அசத்தியிருந்தார் க்ரித்திகா.சில வருடங்களுக்கு முன் இவருக்கு திருமணம் நடைபெற்றது.அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் நெகட்டிவ் ரோலில் நடித்து அசத்தியிருந்தார் க்ரித்திகா.

இதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டவர் இல்லம் தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து வந்த க்ரித்திகா,உங்களை திருமணம் செய்துகொள்ளலாமா என்ற ரசிகரின் கேள்விக்கு பதிலளித்தார்.எனக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

krithika annamalai response to a fan who proposed her for marriage