கடந்த 2008ம் ஆண்டு வெளியான அலிபாபா என்ற படத்தின் மூலம் இவர் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கிருஷ்ணா. பிரபல இயக்குனர் விஷ்ணு வரதனின் தம்பியான இவர் கழுகு, யட்சன், யாமிருக்க பயமேன் போன்ற சிறந்த படங்களில் நடித்து சிறந்த நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.

Krishna Shares Unknown Facts About StarNight Show

தனுஷுடன் நடித்த மாரி 2 படத்திற்கு பிறகு கடந்த ஆண்டு கழுகு 2 படத்தில் நடித்திருந்தார் கிருஷ்ணா. விமர்சன ரீதியாகவும், ரசிகர்களின் பார்வையிலும் சுமாரான வரவேற்பையே பெற்றது இப்படம். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் கிருஷ்ணா, சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். 

Krishna Shares Unknown Facts About StarNight Show

இந்நிலையில் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு குரூப் டான்சராக இருந்த காலத்தை நினைவுகூரும் வகையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பல ஸ்டார் நைட் ஷோக்களில் தான் நடனமாடி உள்ளதாகவும். நிகழ்ச்சிக்கு ரூ.1500 சம்பளமாக வாங்கியுள்ளது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். விரைவில் நிறைய புகைப்படங்களை வெளியிடுவதாக கூறியுள்ளார்.