விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்,அதில் முக்கியமான ஒருவர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று விஜய் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றி அடுத்து சினிமாவுக்குள் நுழைந்து தற்போது முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருகிறார்.

இவரை போல பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நட்சத்திரமாக முயற்சி செய்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான பலரும் மக்கள் மத்தியில் செம ரீச் ஆகி விடுவார்கள்.இந்த கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்கள் அஞ்சலி மற்றும் பிரபாகரன்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கேற்று அசத்தினார்கள் அஞ்சலி மற்றும் பிரபாகரன்.இவர்களது காமெடியுடன் கெமிஸ்ட்ரியும் செட் ஆக இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.தேன்மொழி தொடரில் சில மாதங்கள் நடித்து வந்தார் அஞ்சலி.Mr and mrs சின்னத்திரை நிகழ்ச்சியிலும் பங்கேற்று அசத்தியிருந்தனர் அஞ்சலி மற்றும் பிரபாகரன்.

தற்போது அஞ்சலி கர்பமாக இருக்கும் நற்செய்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.விரைவில் பெற்றோராகவுள்ள பிரபாகரன் மற்றும் அஞ்சலி ஜோடிக்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.