இந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக இயக்குனர் மில்லன்ட் ராவ் இயக்கத்தில் நெற்றிக்கண் திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் வெளியானது. பார்வையற்ற பெண்ணாக நடிகை நயன்தாரா நடித்துள்ள சீரியல் கில்லர் திரைப்படமான நெற்றிக்கண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

தொடர்ந்து இயக்குனர் சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் அண்ணாத்த மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தற்போது திரைப்படங்களையும் தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் இவர்களது தயாரிப்பில் வெளிவந்த கூலாங்கல் திரைப்படம் பல சர்வதேச விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருதுகளையும் கைப்பற்றியது.

கூலாங்கல் திரைப்படத்தின் இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் தற்போது சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டார். நெருங்கிய தோழியும் காதலியுமான அறிவு நிலாவை மிகவும் எளிமையான முறையில் நண்பர்கள் மத்தியில் கோயமுத்தூரில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராம் இவர்களது திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். சாதி மறுப்பு திருமணத்திற்கு பெண் வீட்டில் எதிர்ப்புகள் இருந்தபோதும் இன்று இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜ் மற்றும் அறிவு நிலாவின் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
koozhangal director ps vinoth raj gets married through caste denial marriage

koozhangal director ps vinoth raj gets married through caste denial marriage

koozhangal director ps vinoth raj gets married through caste denial marriage