தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா.தனது நடிப்பாலும் அழகாலும் பல ரசிகர்களை பெற்றிருந்தார் சமந்தா.பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்துவிட்டு சமந்தா அடுத்ததாக தனி ஹீரோயினாகவும் பல படங்களில் நடித்து அசத்தினார்.இவற்றை தவிர பேமிலி மேன் 2 வெப் சீரிஸில் முக்கிய வேடத்தில் நடித்து பெரிய வரவேற்பை பெற்றார் சமந்தா.

இவர் நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.அடுத்ததாக சகுந்தலம்,Dream Warrior Pictures தயாரிப்பில் ஒரு படம்,யசோதா,விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி என பிஸியாக உள்ளார் சமந்தா.இவற்றை தவிர முதன்முறையாக அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் ஒரு பாடலில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் சமந்தா.

இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றது.இவற்றை தவிர இவர் ஒரு ஆங்கில படத்திலும் நடிக்கினார்.Arrangement of Love என்ற நாவலை தழுவி இந்த படம் உருவாகிறது.அடுத்தடுத்து படங்களில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக சமந்தா மாறியுள்ளார்.

ஹிந்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக இருந்து வரும் காபி வித் கரண் நிகழ்ச்சியில் சமந்தா மற்றும் அக்ஷய் குமார் கலந்துகொண்டுள்ளனர்.இந்த நிகழ்ச்சியை இயக்குனர் கரண் ஜோகர் தொகுத்து வழங்குகிறார்.இதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது.சமந்தாவை அக்ஷய் குமார் அலேக்காக தூக்குவது சமந்தாவின் சில கியூட் மொமெண்ட் போன்றவை ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.