கடந்த 2002-ம் ஆண்டு தளபதி விஜய் நடித்து வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் தமிழன். இயக்குனர் மஜித் இந்த படத்தை இயக்கியிருந்தார். இதுதான் அவருக்கு முதல் படமும் கூட. முதல் படத்திலேயே விஜய் மற்றும் பிரியங்கா சோப்ரா போன்ற உச்ச நட்சத்திரங்களை நடிக்க வைத்தார். 

KJR Rajesh Pays Corona Affected Director Majith Hospital Bill KJR Rajesh Pays Corona Affected Director Majith Hospital Bill

இந்த படத்தின் இயக்குனர் மஜித் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதியானார். மருத்துவமனைக் கட்டணத்தை செலுத்த முடியாததால் இயக்குனர் மஜித்தால் மருத்துவமனையை விட்டு வெளியேற முடியவில்லை. திரைத்துறை சார்ந்த நண்பர்கள் அனைவரையும் நிதியுதவி வழங்குமாறு கோரியிருந்தார், ஆனால் அவருக்கு உதவக்கூடிய நிலையில் இல்லை. 

KJR Rajesh Pays Corona Affected Director Majith Hospital Bill

இந்நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ், மஜித்தின் மருத்துவமனை தொகையை செலுத்தி அவரை டிஸ்சார்ஜ் செய்தார். சரியான நேரத்தில் உதவியதற்காக மஜித் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் KJR ராஜேஷின் இச்செயல் பாராட்டிற்குரியது.