தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் கே.வி.ஆனந்த். அயன், கோ, அனேகன், கவண் போன்ற வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார். முதல்வன், சிவாஜி, பாய்ஸ் போன்ற படங்களில் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார். இவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு சூர்யா நடித்த காப்பான் திரைப்படம் வெளியானது.

KVAnand  Kiran

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு நேரத்தில் மக்கள் அனைவரும் அவர்களது வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக உள்ளனர். இந்நிலையில் ஆர்ட் டைரக்ட்டர் கிரண், கே.வி. ஆனந்தை வரைந்துள்ளார். 

KV Anand KV Anand

இதற்கு பதிலளித்த கே.வி.ஆனந்த், COVID19 உன்னை எவ்வளவு வெட்டியா ஆக்கியிருந்தா, என்னையெல்லாம் ஸ்கெட்ச் போடுவ ... இருந்தாலும் பிரமாதம் என்று பதிவு செய்துள்ளார். கலை இயக்கம் அல்லாது நடிப்பிலும் அசத்தி வரும் கிரணின் இந்த ஸ்கெட்சை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது நம் கலாட்டா.