'சூப்பரா ஆடுனாரு!'- ARரஹ்மானுடன் இணைந்து மாமன்னன் பட ஜிகு ஜிகு ரயில் பாடலில் நடனமாடிய சேட்டைகள் பற்றி பேசிய சுட்டிகள்! ட்ரெண்டிங் வீடியோ

ARரஹ்மானுடன் மாமன்னன் பட ஜிகு ஜிகு ரயில் நடனமாடியது பற்றி பேசிய சுட்டிகள்,Kids from maamannan jigu jigu rail song about a r rahman dance | Galatta

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தின் இரண்டாவது பாடலாக வெளிவந்த ஜிகு ஜிகு ரயில் பாடலில் நடனமாடியது குறித்து குட்டிக் குழந்தைகள் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த ஸ்பெஷல் பேட்டியில் பகிர்ந்து கொண்டனர். இந்திய சினிமாவில் ஈடு இணையற்ற இசை ஜாம்பவானாக திகழும் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள், சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் தனது இசையால் பல மாயாஜாலங்களை நிகழ்த்தி இருந்தார். தொடர்ந்து இவரது இசையில் அடுத்தடுத்து அட்டகாசமான திரைப்படங்கள் ரசிகர்களை இசை மழையில் நனைய வைக்க தயாராகி வருகின்றன. அந்த வகையில் தற்போது முதல் முறையாக தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் மாரி செல்வராஜின் மாமன்னன் திரைப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கைக்கோர்த்திருக்கிறார்.

முன்னதாக பரியேறும் பெருமாள் & கர்ணன் என தனது படங்களால்  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பாதிப்பையும் தமிழ் திரையுலகில் பெரும் கவனத்தையும் ஏற்படுத்திய இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகைப்புயல் வடிவேலு, ஃபகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராகவும் நடிகராகவும் திகழ்ந்த உதயநிதி ஸ்டாலின், முன்னதாக கடந்த சட்டமன்றத் தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பதவி வகிப்பதால்,  முழுவதுமாக சினிமாவை விட்டு விலகி முழு நேர மக்கள் பணியில் ஈடுபட முடிவெடுத்துள்ளார். எனவே உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடிப்பில் கடைசியாக வெளிவர இருக்கும் திரைப்படம் மாமன்னன் தான். 

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், செல்வா.RK படத்தொகுப்பு செய்யும் மாமன்னன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வருகிற ஜூன் மாதத்தில் மாமன்னன் திரைப்படத்தை வெளியிடப் பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலாக இசைப்புயலின் இசையில் வைகைப்புயல் பாடி வெளிவந்த ராசா கண்ணு பாடல் ரசிகர்களின் மனதை உருக்கிய நிலையில் இரண்டாவது பாடலாக சமீபத்தில் வெளிவந்த ஜிகு ஜிகு ரயில் பாடல் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. 

அதற்குக் காரணம் இப்பாடலை பாடியுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் நடனமாடி இருப்பது தான். இதுவரை இப்படி ஒரு ஸ்டைலில் ஏ ஆர் ரஹ்மான் அவர்களை பார்த்ததே இல்லை என ஒவ்வொரு ரசிகர்களும் ஆச்சரியத்தில் உற்சாகமாக பார்த்த இந்த ஜிகு ஜிகு ரயில் பாடலில் சாண்டி மாஸ்டரின் நடன இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குழந்தைகளோடு இணைந்து ஜாலியாக நடனமாடி இருக்கிறார். இந்தப் பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் நிலையில், ஜிகு ஜிகு ரயில் பாடலில் ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்து நடனமாடியது குறித்து உடன் நடனமாடிய குழந்தைகள் நமது கலாட்டா சேனலின் பிரத்யேக பேட்டியில் பேசியுள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானோடு இணைந்து நடனமாடிய அனுபவங்கள் குறித்து குழந்தைகள் பேசிய வைரலாகும் அந்த வீடியோ இதோ...
 

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த ஸ்பெஷல் ட்ரீட்
சினிமா

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த ஸ்பெஷல் ட்ரீட் "வீரன் திருவிழா"... ரசிகர்கள் கொண்டாடும் அட்டகாசமான GLIMPSE இதோ!

துல்கர் சல்மானின் மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரம்... கிங் ஆஃப் கோதா பட அதிரடியான ஷூட்டிங் அப்டேட் இதோ!
சினிமா

துல்கர் சல்மானின் மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரம்... கிங் ஆஃப் கோதா பட அதிரடியான ஷூட்டிங் அப்டேட் இதோ!

MSதோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் படம் LET'S GET MARRIED... ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன் வெளிவந்த SPECIAL UPDATE இதோ!
சினிமா

MSதோனியின் தயாரிப்பில் முதல் தமிழ் படம் LET'S GET MARRIED... ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன் வெளிவந்த SPECIAL UPDATE இதோ!