பயில்வான் படத்தின் உருக்கமான விண்மீனே பாடல் !
By Aravind Selvam | Galatta | September 04, 2019 17:05 PM IST

நான் ஈ,புலி உள்ளிட்ட படங்களில் நடித்த கன்னட சூப்பர்ஸ்டார் கிச்சா சுதீப் அடுத்ததாக நடித்து வரும் படம் பயில்வான்.கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.இந்த படத்தின் Firstlook போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி,மலையாளம் என்று ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.Thakur Anoop Singh,சுனில் ஷெட்டி , Akanksha Singh,கபீர் துஹான் சிங் மற்றும் சுஷாந்த் சிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படம் செப்டம்பர் 12ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.தற்போது இந்த படத்தின் விண்மீனே என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.