இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கியாரா அத்வானி.Fugly என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் கியாரா அத்வானி.தொடர்ந்து வெளியான எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வலரற்று படத்தில் ஹீரோயினாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானவராக மாறினார் கியாரா அத்வானி.

இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் க்ரஷ் ஆக வெகு விரைவில் உருவெடுத்தார் கியாரா அத்வானி.இதனை தொடர்ந்து சில ஹிந்தி படங்களிலும்,ஹிந்தி வெப் சீரிஸ்களிலும் நடித்து அசத்தினார்.இதனை தவிர மகேஷ் பாபு,ராம் சரண் உள்ளிட்ட தெலுங்கு முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்தார்,இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2019-ல் வெளியான கபீர் சிங் படத்தின் ஹீரோயினாக நடித்தார்.இந்த படத்தில் இவரது நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.இவருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உருவானது.கடந்த வருடம் அக்ஷய் குமார் நடிப்பில் நேரடியாக OTT-யில் வெளியான லக்ஷ்மி படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் கியாரா அத்வானி.

இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கியிருந்தார்.இந்த படம் தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்த காஞ்சனா படத்தின் ரீமேக் என்பது  குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடித்து வருகிறார் கியாரா அத்வானி இந்நிலையில் தனது பிகினி புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.