தமிழ் சினிமாவின் மாஸ் கமர்ஷியல் இயக்குனர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் சுந்தர்.C.  ஃபேமிலி என்டர்டெய்னர் திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவரான சுந்தர்.C.-யின் நகைச்சுவை திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு.

அந்த வகையில் சுந்தர்.C.-யின் இயக்கத்தில் வெளிவந்து மெகா ஹிட் ஆன அரண்மனை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து வந்த அரண்மனை-2 திரைப்படமும் ஹிட்டடிக்க, நேற்று (OCT 14TH) ஆயுத பூஜை ரிலீசாக வெளியானது சுந்தர்.C.-யின் அரண்மனை 3.

அரண்மனை-3 படத்தில் இயக்குனர் சுந்தர்.C, ஆர்யா,ஆண்ட்ரியா, ராஷி கண்ணா யோகிபாபு, விவேக்,மைனா நந்தினி, மனோபாலா, நளினி, சாக்ஷி அகர்வால், வின்சென்ட் அசோகன்,வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். C.சத்யா இசையில், U.K.செந்தில் குமார் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் அரண்மனை-3 படத்தை ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிட்டது.

நடிகை குஷ்புவின் ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக வெளியான நகைச்சுவை திகில் திரைப்படமான அரண்மனை-3 ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தயாரிப்பாளர் குஷ்பூ அவரது ட்விட்டர் பக்கத்தில், 

"உங்களுடைய அன்பிற்கும் ஆதரவிற்கும் எப்போதும் நன்றிகள்… ஆவ்னி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்தும் இயக்குனர் சுந்தர்.C.-யின்  படக்குழுவிடம் இருந்தும் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்… பெண்களும் குழந்தைகளும் மீண்டும் திரையரங்குகளில் நிறைந்திருப்பதை காண மகிழ்ச்சியாக இருக்கிறது... "

என அரண்மனை3 படத்திற்கு கிடைத்த வரவேற்பிற்கு நன்றி தெரிவித்து கூட்டமாக இருக்கும் திரையரங்கின் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.