திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனும் தொடரில் நடித்தார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு. 

சமீபத்தில் கண்ணில் காயத்துடன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், என்ன ஆச்சு என்று அக்கறையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர். கண் சம்மந்தப்பட்ட ஆப்பரேஷன் ஏதாவது இருக்குமா ? என்றும் கேள்வி எழுப்பினர் அவரது ரசிகர்கள். மேலும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகி, சிறிது நாட்கள் ஓய்வு எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு மீண்டும் ஆக்ட்டிவாகி ட்வீட்டுகளை பதிவு செய்து வருகிறார். 

நவரச நாயகன் கார்த்திக் நேற்று தன் பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தன் தந்தையுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு கவுதம் கார்த்திக்கும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குஷ்பு தனக்கு பிடித்த ஹீரோவாக கார்த்திக்கிற்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்தார்.தான் கார்த்திக்குடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரொஃபைல் பிக்சராக வைத்தார் குஷ்பு. குஷ்புவின் ட்வீட்டை பார்த்த ரசிகர்களோ, இந்த ஜோடி சூப்பர் ஹிட் ஜோடி என்று பாராட்டினார்கள். ஆனால் சமூக வலைதளவாசி ஒருவரோ, அசிங்கமாக கமெண்ட் அடுத்து இது தான் கூத்தாடிகளின் வாழ்க்கை என்றார்.

ஒரு பெண்ணின் புகைப்படத்தை டிபியாக வைத்திருக்கிறீர்கள்...நீங்கள் ஒரு தமிழன் என்று சொல்லிக் கொள்ள வெட்கப்பட வேண்டும். உன் அம்மா யாருடா? கூத்தாடி பத்தி நிறைய தெரிஞ்சு வச்சிருக்க என்று கேட்டு பதிலடி தந்தார். நடிகை குஷ்புவின் இந்த துணிச்சலான செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

லாக்டவுன் பிரச்சனையால் அண்ணாத்த படத்தின் ரிலீஸை தள்ளிப் போட்டார்கள். 2021ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக அண்ணாத்த ரிலீஸாகும் என்று கூறப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் பிரச்சனை தற்போதைக்கு முடிவதாக தெரியவில்லை. இதனால் திட்டமிட்டபடி நவம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை நடத்தி முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் செய்வது என்பது கடினமாகிவிட்டது. இந்த காரணத்தால் அண்ணாத்த படத்தை பொங்கலுக்கு பதிலாக அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.