திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

Khushbu Shares SundarC Childhood Photo

இந்நிலையில் குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தனது கணவர் சுந்தர்.சியின் சிறுவயது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் சில விஷயங்கள் எப்பொழுதுமே பொக்கிஷம் போன்றது என அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

Khushbu Shares SundarC Childhood Photo

அரண்மனை படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ராஷி கண்ணா, சாக்ஷி  அகர்வால், யோகி பாபு, விவேக் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர். சத்யா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.