தமிழ் சினிமாவில் பல நாட்கள் ஓடி சாதனை புரிந்த திரைப்படம் சின்னத்தம்பி. நடிகர் பிரபு, குஷ்பூ இணைந்து நடித்த இப் படத்தை P. வாசு இயக்கினார். தெலுங்கு, கன்னடம் ஹிந்தி போன்ற மொழிகளில் இந்த படத்தை ரீமேக் செய்தனர். ஊரில் பாட்டு பாடி கொண்டிருக்கும் சின்னதம்பி பிரபுவுக்கும், பெரிய வீட்டுப் பெண் குஷ்புவுக்கும் காதல் மலரும். குஷ்புவுக்கு மூன்று அண்ணன்கள் இருப்பார்கள். படத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் மூன்று அண்ணன்மார்கள் இருக்கின்றனர். 

kushboo

தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் அவர் சகோதரர்களுடன் எடுத்த சின்ன வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். டீன் ஏஜ் பருவத்தில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில், பாசமிகு தங்கையாக குஷ்பு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kushboo

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அண்ணாத்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்கவுள்ளார் குஷ்பு. சிவா இயக்கிவரும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

One of the rare pics from Mumbai days.. me protected by my 3 big brothers.. a la #chinnathambi

A post shared by Khush (@khushsundar) on