திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனும் தொடரில் நடித்தார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு. 

Khushbu Shares Her Childhood Photo In Instagram

பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Khushbu Shares Her Childhood Photo In Instagram

இந்நிலையில் நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலிவுட் நடிகர் சசி கபூருடன் குழந்தை நட்சத்திரமாக உள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மற்றொரு பக்கம் நடிகர் ஜாக்கி ஷெராஃப் உடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். அப்பதிவில், 1980ல் குழந்தை நட்சத்திரமாக சசிகபூரூடன்  நடித்தேன் அதன் பின் 1984 ஆம் ஆண்டு ஜாக்கி ஷெராஃபிற்கு ஜோடியாக நடித்தேன் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.