திரையுலகில் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பு. அரசியலில் பிஸியாக இருக்கும் குஷ்பு, திரைப்படங்கள் தவிர்த்து சீரியலிலும் கலக்கி வருகிறார். லக்ஷ்மி ஸ்டோர்ஸ் எனும் தொடரில் நடித்தார். திரையில் இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போல், சோஷியல் மீடியாவிலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார் குஷ்பு. 

Khushbu New Look Photos Go Viral

பல நாட்கள் கழித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். சிவா இயக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் மீனா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதிஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Khushbu New Look Photos Go Viral

இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதில் உடல் இடை குறைந்து ஸ்லிம்மாக காணப்படுகிறார் குஷ்பு. இந்த பதிவு லைக்ஸை குவித்து வருவதோடு, வைரலாகி வருகிறது. அண்ணாத்த படத்திற்காக இந்த மாற்றம் இருக்குமோ... என்று கமெண்ட் செய்து வருகின்றனர் திரை விரும்பிகள்.