கடந்த 2018 ல் வெளிவந்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் ஆச்சர்யத்தில் மிரள வைத்த திரைப்படம் கே.ஜி.எப் – 1. இந்த திரைப்படத்தின் மூலமாக கன்னட திரையுலகத்திற்கான கூடுதல் மரியாதையையும் கவனத்தையும் வாங்கி தந்தவர் அந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல். கே ஜி எப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது என்ற ஆவலும் அதன்பின் பிரசாந்த் நீல் இயக்க போகும் படத்தின் அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்தன. சொல்லி அடித்தது போல் கடந்த 2022 ஆண்டில் பாக்ஸ் ஆபிஸ் வசூலை குவித்தது.

உலகம் முழுவதும் வசூல் செய்யப்பட்ட கேஜிஎப் கிட்டத்தட்ட இந்தியாவில் பெரும்பாலான மொழிகளில் வெளியாகி அனைத்து தரப்பினரின் ஆதரவையும் பெற்று பிரம்மாண்ட வெற்றி பெற்றது. படத்தின் பணியாற்றிய அனைத்து குழுவினருக்கும் அவரவர்கேற்ற அங்கீகாரம் கிடைக்க காரணமாக இருந்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல்.

இயக்குனர் பிரசாந்த் நீல் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் கே.ஜி.எப் படத்தின் இறுதிகட்ட வேலையின் போதே வெளியாகின. பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் நடிப்பில் ‘சலார்’ படத்தை இயக்கி வருகிறார். கே.ஜி.எப் 1,2  திரைப்படங்களை தயாரித்த ஹோம்பாளே நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரித்து வருகின்றது. கே.ஜி. எப் திரைப்படத்தின் பான் இந்திய வெற்றியை தொடர்ந்து நடிகர் பிரபாஸை வைத்து மீண்டும் ஒரு பான் இந்திய படத்தை எடுக்க முடிவு செய்து கிட்டத்தட்ட படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

இதனிடையே அவரது அடுத்த படத்திற்கான தகவலும் வெளியாகின.  இந்த படத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவுள்ளார். மேலும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக தகவல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த திரைப்படம் ஜூனியர் என்.டி.ஆரி ன் 31 வது படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் உலகநாயகன் கமல்ஹாசனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்தன. ஆனால் கடந்த ஆண்டு வெளிவந்த விக்ரம் திரைப்படத்தின் அபார வெற்றிக்கு பிறகு அதை அவர் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து கமல் ஹாசன் நடிக்கவிருந்த பாத்திரத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் நடிக்க இருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது..‌

கே.ஜி.எப் – ல் பாலிவுட் ஸ்டார் சஞ்சய் தத்தை முக்கிய பார்த்திரத்தை அறிமுகம் செய்து அந்த பாத்திரத்தை சரியாக நியாயப்படுத்திருப்பார் இயக்குனர் பிரசாந்த் நீல். அதனை தொடர்ந்து அடுத்த பாலிவுட் ஸ்டார் ஆமிர் கானையும் சரியாக பயன்படுத்துவார் என சினிமா வட்டாரம் பேசிவருகிறது. கே.ஜி.எப் எனும் பான் இந்திய திரைப்படத்திற்கு பின் தொடர்ந்து பான் இந்திய ஸ்டார்களான பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோருடன் இணைவதும் கமல் ஹாசன், ஆமிர்கான் ஆகியோருடனான பேச்சுவார்த்தை முயற்சிகள் இயக்குனர் பிரசாத் நீல் மீது எதிர்ப்பார்ப்புகளை அதிகரிக்கின்றது.