கன்னட திரையுலகின் மிக பிரம்மாண்ட தயாரிப்பான கே.ஜி.எப் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. ரெட்ரோ ஸ்டைலில் வெளியான இந்த படம் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது. 

kgf

தென்னிந்திய சினிமாவின் முன்னணி ஸ்டாரான யாஷ் கதாநாயகனாக நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது. மேலும் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது கே.ஜி.எஃப் படத்தின் 2-ம் பாகம் மிக பெரிய பொருட்செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்கிறார். 

kgf

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இணையத்தை ஈர்த்து வருகிறது. இதனால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் திரை ரசிகர்கள்.