கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ளனர். வீட்டிலே முடங்கியிருக்கும் பிரபலங்கள் உடற்பயிற்சி செய்வது, வீட்டு வேலைகள் செய்வது, டான்ஸ் ஆடுவது, பாடல் பாடுவது என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். திரைப்பிரபலங்கள் தவிர்த்து கிரிக்கெட் வீரர்களும் சமூக ஊடகங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றனர். 

KevinPietersen Dancing For Ottagathai Kattiko Song

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் தமிழ் பாடலுக்கு நடனமாடி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஒட்டகத்த கட்டிக்கோ பாடலுக்கு நடனமாடி டடிக்டாக் செய்துள்ளார். 

KevinPietersen Dancing For Ottagathai Kattiko Song KevinPietersen Dancing For Ottagathai Kattiko Song

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய முதல் படமான ஜென்டில்மேன் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றிருக்கும். அர்ஜுன், மதுபாலா ஆடிய இந்த பாடலை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். 

@kevinpietersen

🕺 ##houseoftiktok 🤣

♬ OTTAGATHAI KHATIKHO - SAMIER